அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளருமான இளங்கோவனுக்கு சொந்தமான கல்வி நிலையங்களில் வருமான வரித்துறையினர் 4-வது நாளாக இன்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் முசிறியில் இளங்கோவனுக்கு சொந்தமான எம்ஐடி கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளது. இதில், எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரி, மகளிர் கலை அறிவியல் கல்லூரி, எம்ஐடி போதி வித்யாலயா மற்றும் வெள்ளாளப்பட்டியில் எம்ஐடி வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை இயங்கி வருகிறது.
இந்நிறுவனங்களில், கடந்த 21 -ஆம் தேதி முதல் 8 பேர் கொண்ட குழுவினர் விடிய விடிய சோதனை மேற்கொண்டுள்ளனர். சோதனை நடைபெறும் நேரத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்க தடை விதிக்காத நிலையில், ரெய்டு நடைபெறும் பகுதிகளில் யாரையும் அனுமதிக்கவில்லை.