குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலையை, ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இன்று பிரதமர் மோடியுடன் இணைந்து குஜராத் செல்கிறார். அங்கு வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஆலையை இருவரும் திறந்து வைக்கவுள்ளனர். இந்த ஆலையில் இருந்து ராணுவத்துக்கு தேவையான சி-295 ரக விமானம் தயாரிக்கப்படவுள்ளன.
இதற்காக, ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் டாடா குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது. 2026ஆம் ஆண்டு இந்த ஆலையில் இருந்து முதல் விமானம் தயாரித்து முடிக்கப்படும் எனவும், 2031ஆம் ஆண்டுக்குள் 39 விமானங்கள் தயாரித்து இந்திய ராணுவத்திடம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.