சென்னையில் வாக்காளர் சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாஜக நிர்வாகி மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அயோத்தியா குப்பத்தில் லேடி வெல்லிங்டன் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியின் முன்பு பாஜக சார்பில் அதன் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு உதவும் வகையில் வாக்காளர் பட்டியல் விவரங்களுடன் சாலையோரம் சேர்களில் அமர்ந்து இருந்தனர்.
அப்போது திமுக வட்ட செயலாளர் சசிகுமார் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரது தூண்டுதலின் பேரில் பாஜக மீனவர் அணி மாவட்ட தலைவர் ஜெகதீசனை தாக்கிய திமுகவினர் அவரது இருசக்கர வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக பாஜக சார்பில் மெரினா காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.