திரையரங்கு செல்லும் கூட்டம் எல்லாம் தொண்டர்களாக மாட்டார்கள் என்றும் தவெக மாநாட்டிற்கு முதலாவதாக வந்த கூட்டம் என்பது ரசிகர் மன்றத்திற்கான கூட்டம் எனவும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விமர்சித்துள்ளார்.
ஈரோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் இதனை அவர் தெரிவித்தார்.