நாம் தமிழர் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெகதீஷ், கட்சியிலிருந்து விலகி உள்ளார்.
இதுதொடர்பான தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை தன்னோடு களமாடிய உண்மையான களப்போராளிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். தமிழக முழுவதும் நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், மண்டல செயலாளர்கள் அக்கட்சியிலிருந்து அடுத்தடுத்து விலகி வருவதால், கட்சி தலைமை அதிருப்தி அடைந்துள்ளது.