தஞ்சாவூரில் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஒரத்தாநாடு அருகே திருமங்கலகோட்டையில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொண்டனர். இந்நிலையில், தஞ்சாவூரில் பெய்த கனமழை காரணமாக விவசாய நிலங்கள் அனைத்தும் நீரில் மூழ்கின.
மேலும், அங்குள்ள பஞ்சநதி வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் செல்ல வழியின்றி மழைநீர் அங்கேயே தேங்கியுள்ளது. இதனால் வேதனையடைந்துள்ள விவசாயிகள், பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கீடு செய்து அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.