நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் கனமழையால் ஒன்பதாயிரம் ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள கோடியக்காடு மற்றும் அகஸ்தியன்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.