கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் சாலையை சீரமைக்க கோரி கடைகளை அடைத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வணிகர்களை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவிலில் இருந்து களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி வாகன விபத்து நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், மார்த்தாண்டம் மற்றும் பம்மம் உட்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான வியாபாரிகள் கடைகளை அடைத்து, மார்தாண்டம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.