வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பாஜகவினர் பேரணி நடத்தினர்.
வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாகவே, இந்துக்களுக்கு எதிராக வன்முறை அரங்கேறி வருகிறது. இந்த அராஜக செயல்களுக்கு எதிராக அமைதியான முறையில், இஸ்கான் அமைப்பின் தலைமை துறவி சின்மயி கிருஷ்ணா தாஸ் பிரம்மச்சாரி போராடி வந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, வங்கதேச தலைநகரான டாக்காவில், கிருஷ்ணதாைஸ போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.இதனைக் கண்டித்து கொல்கத்தாவில் சட்டமன்ற மேலவை உறுப்பினர் சுவேந்து அதிகாரி உள்பட ஏராளமான பாஜகவினர் வங்கதேச தூதரகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.