இறங்கி வரும் அமெரிக்கா - போர் நிறுத்தம் ஏற்பட்டால் ரூ.28.5 லட்சம் கோடி நிதி ஈரானுக்கு வழங்க சம்மதம்? சிறப்பு தொகுப்பு!
Sep 1, 2026, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இறங்கி வரும் அமெரிக்கா – போர் நிறுத்தம் ஏற்பட்டால் ரூ.28.5 லட்சம் கோடி நிதி ஈரானுக்கு வழங்க சம்மதம்? சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 30, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தற்காலிகப் போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா- ஈரான் இருநாடுகளுக்கும் இடையே புதிய வரைவு ஒப்பந்தம் அதிபர் ட்ரம்பின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்ன அம்சங்கள் உள்ளன என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய ஈரான்- அமெரிக்கா போரை முடிவுக்குக் கொண்டுவர சவூதி அரேபியா கத்தார் உள்ளிட்ட பல நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. தற்காலிக போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்ட இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கான இடைத்தரகராக பாகிஸ்தான் இருந்து வருகிறது.

இதன் விளைவாக, தற்காலிக போர்நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கவும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒப்பந்தத்தின் வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ள ஈரான், தங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே எந்தவொரு உடன்பாடும் முழுமையானதாகக் கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஈரானின் அணுசக்தித் திட்டம், அமெரிக்கத் தடை நீக்கம் மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

எந்தவித சுங்க கட்டணமும் இல்லாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். 30 நாட்களுக்குள் அப்பகுதியில் உள்ள அனைத்து கண்ணிவெடிகள் ஈரானால் அகற்றப்படும். வணிகக் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியவுடன் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை திரும்பப் பெறப் படும் போன்ற அம்சங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருப்பதாக தெரிகிறது.

60 நாட்கள் நடைபெறும் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈரானிடம் உள்ள சுமார் 970 பவுண்டு செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அகற்றுவது மற்றும் செறிவூட்டப்பட்ட சுமார் 10 டன் கூடுதல் அணுப் பொருள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இஸ்ரேலுக்கு உடன்பாடு இல்லையென்றாலும் லெபனான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மறுசீரமைப்புத் திட்டத்தை உருவாக்க ஈரானுக்கு அமெரிக்கா உதவும் என்றும், இறுதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இந்த நிதி வழங்கப்படும் என்றும் அது சர்வதேச முதலீட்டு நிதியாக இருக்கும் என்றும், எண்ணெய் மற்றும் எரிசக்தி நிறுவனங்கள் உட்பட அமெரிக்க நிறுவனங்கள் ஈரானுக்குள் அனுமதிக்கப் படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சுமார் 24 பில்லியன் டாலர் நிதி சொத்துக்களை மீட்கவும் ஈரான் முயற்சி செய்து வருகிறது.

பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகள் மூலமாகவே பெரும்பாலான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதால், இரு தரப்பும் ஒரே மாதிரியான வரைவுத் திட்டத்தின் கீழ் தான் செயல்படுகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இருப்பினும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 

Tags: iran war latestisrael us iran waramerica vs iran warus iran dealiran warIran-US wariran war newsus iran war liveiran war update
Share
Tweet
SendShare
Previous Post

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக வருவது எப்படி? : வெளியான ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

Next Post

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

Related News

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies