தஞ்சை அருகே மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை அருகே 9-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தனக்கு வயிற்று வலி அதிகமாக உள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சிறுமிக்கு அன்றைய தினமே பெண் குழந்தை பிறந்தது. விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் நெருங்கி பழகியதால் மாணவி கர்ப்பமடைந்தது தெரியவந்தது.
புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார், மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.