சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஆடு திருடிய இரண்டு கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளாளகுண்டம் கணபதி நகரை சேர்ந்த பழனிச்சாமி தனது தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது காரில் வந்த 2 இளைஞர்கள், ஆடுகளை திருடிச் சென்றனர். இதுகுறித்து கொடுத்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்முகிலன், சுஜய் ஆகிய கல்லூரி மாணவர்கள் ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.