கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் எத்திகட்டி வனப்பகுதியில் இருந்து 40 யானைகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரகள்ளி வனச்சரத்துக்குட்பட்ட வனப்பகுதிக்குள் ஒரே நேரத்தில் நுழைந்துள்ளது.
இதனால், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி ஒட்டியுள்ள மலை கிராம மக்கள் இரவு நேரங்களில் தங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், முன்னெச்சரிக்கை இருக்குமாறு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.