வயநாடு தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி, எம்பியாக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
கேரளாவில் உள்ள வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு சென்ற அவர், இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி, வயநாடு எம்பியாக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.