படகுகளில் பொருத்தப்பட்டுள்ள இயந்திர மோட்டார் பம்புகளை அகற்ற வேண்டும் என்ற மீன்வளத்துறையின் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி 600க்கும் மேற்பட்ட சங்குகுளி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடலில் மூழ்கி சங்கு எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.
இதற்காக படகுகளில் மோட்டார் பம்புகள் பொருத்தி சங்கு எடுத்து வருகின்றனர். இந்நிலையில், மீனவர்கள் தங்களது படகில் பொருத்தியுள்ள மோட்டார் பம்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மீன்வளத்துறையினர் உத்தரவிட்டனர்.
இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள மீனவர்கள், தமிழக அரசு மற்றும் தூத்துக்குடி மீன்வளத்துறையை கண்டித்து 600க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..