சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பெய்த தொடர் மழையால் போக்குவரத்து, மின்சார விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த ஐந்து நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மின்கம்பிகள் மீது மரம் சாய்ந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக ஏற்காடு மலைப்பாதை 40 அடி பாலம் அருகில் இருந்த ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், 60 அடி பாலத்தில் பாறை உருண்டதால் காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 82 இடங்களில் சாலைகளிலும் 33 இடங்களில் மின் கம்பங்களிலும் மரங்கள் விழுந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் மந்தகதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.