மகாராஷ்டிரா பாஜக மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் முடிவு வெளியாகி ஒருவாரம் ஆன போதிலும், முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் சுணக்கம் நீடிக்கிறது. இந்தப் பிரச்னைக்குத் துரிதமாக தீர்வு காணும் நோக்கில், மேலிட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வரும் 5-ஆம் தேதி முதலமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறும் என மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.