ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் ஆறுபோல் ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஓமலூர், காடையாம்பட்டி, சின்னப்பட்டி பகுதிகளில் பெய்த மழையால் ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறியது. மேலும், சேலம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் ஆறு போல் ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.