அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்துவதா? - எச். ராஜா கடும் கண்டனம்!
Oct 21, 2025, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்துவதா? – எச். ராஜா கடும் கண்டனம்!

தமிழக அரசுக்கு எச். ராஜா கடும் கண்டனம்!

Web Desk by Web Desk
Dec 17, 2024, 04:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்துவதா?, தமிழக அரசுக்கு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கோவையில் 58 அப்பாவி ஹிந்துக்களை வெடிகுண்டு வைத்து கொடூரமாக படுகொலை செய்த குண்டுவெடிப்பு குற்றவாளி பயங்கரவாதி அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்த தமிழக அரசும், காவல்துறையும் அனுமதிப்பது, பயங்கரவாதிகளை நல்லவர்களாக சித்தரிக்க முயலும் செயல் மட்டுமின்றி வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வங்க தேசத்தில் தொடர் தாக்குதலுக்கு உள்ளான ஹிந்துக்களுக்காக தற்போது காங்கிரஸ் கட்சி கூட குரல் கொடுக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி வங்க தேச ஹிந்துக்களுக்காக குரல் கொடுப்பது கூட கண்துடைப்பு நாடகமாக இருந்தாலும் இதுவரை திமுக வங்க தேச ஹிந்துக்களுக்காக குரல் கொடுக்கவே இல்லை.

வங்க தேசத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான ஹிந்துக்களுக்காக தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களுக்கு முன்னால் அனைத்து மாவட்டங்களிலும் ஜனநாயக முறையில் ஹிந்து இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய போது அதற்கு மறுப்பு தெரிவித்து, அறவழியில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை கைது செய்தது தமிழக காவல்துறை.

கோவை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த ஹிந்துக்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடத்த ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அனுமதி மறுத்து பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஹிந்து இயக்கங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது தமிழக காவல்துறை. தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட ராமலிங்கம் அவர்களின் இறுதி ஊர்வத்தை நடத்தவும், அவரது படுகொலைக்கு நீதி கேட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து ஹிந்து இயக்கங்கள் சார்பாக மெளன ஊர்வலம் நடத்தவும் ஹிந்து இயக்கங்கள் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரிய போது அக்கோரிக்கையை நிராகரித்து அன்று அனுமதி மறுத்தது தமிழக காவல்துறை.

ஆனால் கோவையில் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தி 58 அப்பாவி ஹிந்துக்களை படுகொலை செய்து பலர் உடல் ஊனமுறுவதற்கும் காரணமான மிகக்கொடிய பயங்கரவாதி நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை நடத்த அனுமதி அளிப்பதிருப்பதை பார்க்கும் போது தமிழக அரசும், காவல்துறையும் பயங்கரவாதிகள் விஷயத்தில் தொடர்ந்து மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்கிறதோ என்கிற சந்தேகத்தை ஹிந்துக்கள் அனைவருக்கும் ஏற்படுத்துகிறது.

கோவை குண்டுவெடிப்ப குற்றவாளி அல்உமா பாஷாவின் இறுதி ஊர்வலத்தை விமரிசையாக நடத்துவதற்கு காவல்துறை அனுமதிக்கக்கூடாது என்பதே ஹிந்துக்கள் அனைவரின் கோரிக்கையாகும். தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக இவ்விஷயத்தில் நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: h rajatn bjpCriticism of AlUma Pasha's funeral? - H. King condemned!
ShareTweetSendShare
Previous Post

சவுக்கு சங்கர் மீண்டும் கைது!

Next Post

உலகில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தலைமையிடமாக இந்தியா மாறும்! : மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி  

Related News

அரபிக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு?

மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்

காவலர் நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மரியாதை!

அமாவாசை தினத்தில் கேதார கெளரி நோன்பு கடைபிடிக்கும் பெண்கள்!

திருவள்ளூர் : தொடர் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

அந்தியூர் அருகே உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

சீன பொருட்களுக்கு நவ. முதல் 155% வரி விதிக்க வாய்ப்பு : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்கா : விறுவிறுப்பாக நடைபெற்ற விநோத பூசணிக்காய் படகு பந்தயம்!

வெள்ளை மாளிகையை இடிக்கும் பணிகள் தொடக்கம்!

அமெரிக்கா : சுவாமி நாராயணன் அக்ஷர்தம் கோயிலில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies