திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாத யாத்திரையாக வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சிவகாசியில் இருந்து பாதயாத்திரையாக வந்தவர்கள், தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும், தரிசனம் செய்ய செல்லும் நுழைவாயில் பூட்டப்பட்டதால் காவலாளிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அலகு குத்தி பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ள நிலையில், காவலாளிகள் அனுமதி அளிக்காமல் அடாவடியில் ஈடுபடுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பாதயாத்திரையாக வருபவர்கள் விரைவாக தரிசனம் செய்ய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.