மாநில தகவல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Sep 10, 2026, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாநில தகவல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Dec 23, 2024, 03:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், திம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், மாவட்ட நீர்வளத்துறை உதவிப்பொறியாளராக பணியாற்றிய காளி பிரியன் என்பவரின் சொத்துக்கள், கடன்கள் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார்.

ஆனால், அந்த தகவல்கள் அரசு ஊழியரின் தனிப்பட்ட விவரங்கள் எனவும், அவற்றை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வாங்க முடியாது எனவும் கூறி, மாநில தகவல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது.

மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சீனிவாசன் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சீனிவாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 8-ன் கீழ் அரசு ஊழியர் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வது அடிப்படை உரிமை என வாதிட்டார்.

வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல எனவும், அவற்றை பொதுமக்கள் பரிசீலனையில் இருந்து பாதுகாக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும், மாநில தகவல் ஆணையம் தகவல்களை வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை மீண்டும் பரிசீலித்து 2 மாதங்களில் தகவல்களை வழங்க வேண்டும் என மாநில தகவல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.

Tags: Madras High Court orders the State Information Commission!
Share
Tweet
SendShare
Previous Post

4 படகுகள் அடுத்தடுத்து கவிழ்ந்து விபத்து!

Next Post

சென்னை, எண்ணூர் உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Related News

டாஸ்மாக் மதுபான பாட்டில்களுக்கு கூடுதல் பணம் பெறுவது 80% குறைந்துள்ளது – அமைச்சர் விக்னேஷ்

முதலமைச்சருக்கான கண்ணியத்துடன் வார்த்தை உடல்மொழி இருக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின் பதில்!

மூச்சுத்திணறல் காரணமாக கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி மாணவர்களுக்காக குரல் வசதியுடன் கூடிய AI கற்றல் செயலியை உருவாக்கிய 9-ம் வகுப்பு மாணவன் – குவியும் பாராட்டு!

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை – கோயில் ஊழியர் மீது தவெக நிர்வாகிகள் தாக்குதல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூ. 9, 576 கோடி கூடுதல் செலவு – மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் தகவல்!

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் – 9 மீனவ கிராம மக்கள் எதிர்ப்பு!

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies