பிரதமர் மோடியால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை கார் வியாபாரிகள் சங்கத்தின் 9-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன், ஹெச்.வி.ஹண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல். முருகன் சென்னை கார் வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு மருத்துவ காப்பீட்டை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், பிரதமர் மோடியால் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என பெருமிதம் தெரிவித்தார். மேலும், 2047 இல் உலகத்திற்கு வழிகாட்டியாக இந்தியா விளங்கும் என்றும் அவர் கூறினார்.