மத கஜ ராஜா திரைப்பட விழாவில் நடிகர் விஷால் கைநடுக்கத்துடன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஷால் நடிப்பில் நீண்ட காலமாக வெளிவராமல் உள்ள மத கஜ ராஜா திரைப்படம் இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது.
இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால் கை நடுக்கத்துடன் பேசினார். அவர் அதீத காய்ச்சலுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் நடிகர் விஷால் கை நடுக்கத்துடன் பேசும் வீடியோவை பார்த்து அவருக்கு என்ன ஆனது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.