மதுரையில் வருமானவரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார்.
மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் வருமானவரித்துறை அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களோடு மக்களாக சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், அது நடந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்கள் எனவும் கலகலப்பாக பேசியுள்ளார்.