விழுப்புரத்தில் மொபைல் கடையில் 10 ஆயிரம் ரூபாய் கேட்டு திமுக பிரமுகர்கள் மிரட்டல் விடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் திறந்து வரும் நிலையில், விழுப்புரம் சிக்னல் பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு சென்ற திமுக பிரமுகர் தமிழ்மணி மற்றும் திமுக 13வது வார்டு பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் மிரட்டல் விடுத்துள்ளனர்.
விழுப்புரத்தில் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப் போவதாகவும், அதற்கு பணம் தர வேண்டும் எனவும் கேட்டுள்ளனர். பணத்தை தரவில்லை என்றால் கடையை பூட்டிவிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக கடைக்காரர் அளித்த புகாரின் பேரில் திமுக பிரமுகர்கள் தமிழ்மணி, வெங்கடேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.