தேநீர் ஆடையில் முருகப்பெருமானின் ஓவியத்தை வரைந்து சிவகங்கை மாவட்ட ஓவியர் அசத்தியுள்ளார்.
கண்ணார் தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக், சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர்.
பல்வேறு விதங்களில் ஓவியம் வரைந்து தனது திறனை வெளிப்படுத்தி வரும் அவர், தேநீர் மீது விழும் ஆடையில் முருகப்பெருமானின் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார். இவரது ஓவியத்தை பலரும் கண்டு கார்த்திக்குக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.