குட் பேட் அக்லி என்ற தலைப்பை அஜித்குமார் தான் கொடுத்தார் என அத்திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் லீலா பேலஸில் குட் பேட் அக்லி திரைப்பட குழுவின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், பிரியா வாரியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் தான் தனக்கு மிகப்பெரிய பாதை அமைத்துக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.
குட் பேட் அக்லி என்ற தலைப்பை அஜித் தான் வழங்கியதாகக் கூறிய அவர், இந்த படத்திற்கு அஜித் முழு உழைப்பை வழங்கியதாகத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அர்ஜூன் தாஸ், இந்த படத்தில் நடிக்க அஜித் தான் தன்னை தேர்வு செய்ததாகவும், தன்னை நம்பி இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை வழங்கியதற்காக நன்றி எனவும் தெரிவித்தார்.