ரூ.25 கோடி அம்போ : குப்பை மேடாக மாறிய சிட்லபாக்கம் ஏரி!
Sep 12, 2026, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரூ.25 கோடி அம்போ : குப்பை மேடாக மாறிய சிட்லபாக்கம் ஏரி!

Murugesan M by Murugesan M
May 22, 2025, 06:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

25 கோடி ரூபாய் மதிப்பில் அழகுபடுத்தப்பட்ட சிட்லபாக்கம் ஏரி தற்போது முறையான பராமரிப்பின்றி குப்பை மேடுகளாகக் காட்சியளிக்கிறது. ஏரியில் கலக்கும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தாம்பரம் மாநகராட்சியில் இருக்கும் 15 நீர்நிலைகளில் முக்கியமானதாக விளங்குகிறது இந்த சிட்லப்பாக்கம் ஏரி. மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டிருந்த இந்த ஏரி தற்போது ஆக்கிரமிப்பில் சிக்கி படிப்படியாகச் சுருங்கத் தொடங்கியுள்ளது.

ஏரியைச் சுற்றிலும் கொட்டப்படும் குப்பைகள் மலைபோல குவிந்திருப்பதோடு, ஏரியில் கலக்கும் கழிவுநீரால் அப்பகுதி நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு சுத்தமான குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் முன்னெடுப்பில் சிட்லபாக்கம் ஏரியை மறுசீரமைக்க 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கின.

பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தபின்பு மந்தமான அப்பணிகள் பொதுமக்களின் போராட்டத்திற்குப் பின் நிறைவு பெற்றன. உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் நடைப்பயிற்சிக்காகப் பூங்காவைப் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது குவிந்திருக்கும் குப்பைகள் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கழிவுநீர் கால்வாயிலிருந்து எடுக்கப்பட்டு தரைப்பகுதியிலேயே கொட்டப்படும் கழிவுகளால் 25 கோடி ரூபாய் மதிப்பில் தூய்மையாக்கப்பட்ட ஏரி மீண்டும் அசுத்தமடையத் தொடங்கியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட பூங்காவில் மக்களுக்குத் தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

தாம்பரம் பகுதி மக்களின் சிறந்த பொழுதுபோக்கு தளமாகவும், சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் சிட்லப்பாக்கம் ஏரி மற்றும் அதனை ஒட்டிய பூங்காவை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

Tags: Rs. 25 crore Ambo: Chitlapakkam lake turned into a garbage dumpரூ.25 கோடி அம்போகுப்பை மேடாக மாறிய சிட்லபாக்கம் ஏரி
Share
Tweet
SendShare
Previous Post

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

Next Post

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்கள் – இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies