ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் - செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!
Sep 12, 2026, 01:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் – செய்தி வாசித்துகொண்டிருந்த பெண் அலறியடித்து ஓட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 17, 2025, 06:21 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரானில் தொலைக்காட்சி நிலைய கட்டடத்தின் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

ஈரானின் குவாம் நகர் அருகே உள்ள போர்டோவ் அணு உலை மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், ஈரான் ராணுவத்தின் குவாட் படைப் பிரிவின் கட்டுப்பாட்டு மையத்தையும் தாக்கி அழித்ததாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம், ஈரான் அரசு தொலைக்காட்சி நிலைய கட்டடம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அப்போது அங்கு, பெண் செய்தி வாசிப்பாளர் சாகர் இமாமி என்பவர் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார். கட்டடத்தை ஏவுகணை தாக்கியதை உணர்ந்த அவர், பதறியடித்து ஓடினார். இந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.

இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் அந்த கட்டடம் முழுமையாக சேதமடைந்து புகைமண்டலமாக காட்சியளித்தது. இந்த தாக்குதலின்போது தொலைக்காட்சி நிலைய கட்டடத்தில் ஊழியர்கள் பலர் இருந்தனர்.

இதில், பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கான மசோதாவை தயாரிக்க ஈரான் நடாளுமன்றம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனை ஈரான் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பகாயி உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், டெஹ்ரானிலிருந்து அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் கையெழுத்திடக் கூறிய ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

எளிமையாகச் சொன்னால், ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது என்றும், தான் அதை மீண்டும் மீண்டும் சொல்லி விட்டதாகவும் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

Tags: Air StrikeIran missile attackOperation Rising Lionnuclear power plants attackedIsrael Prime Minister Benjamin NetanyahuAli KhameneiIsraelmedia office attackedLebanonHamasgazaIran
Share
Tweet
SendShare
Previous Post

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

Next Post

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies