தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!
Jun 21, 2026, 06:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாகத் தமிழகத்தில் கடந்த 2023ம் ஆண்டு முதல் தற்போது வரை தலைமைச் செயலாளர்களாகப் பதவி வகித்தவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்குக் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாகக் குழு அமைக்க வேண்டும், அது தொடர்பான அறிக்கையை  3 மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2023ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தமிழக அரசு அமல்படுத்தாமல் இருந்தது தெரியவந்தது.

இதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிபதி கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை பதவியில் உள்ள தலைமைச் செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு தரப்பு வாதத்தைக் கேட்டறிந்தது, அப்போது வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாகக் குழு அமைக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது எனத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கும் கண்டனம் தெரிவித்த நீதிபதி பட்டு தேவானந்த் நீதிமன்றம் தாமாக முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின்தான் தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தமிழக அரசு பின்பற்றாதது அவமதிப்பு செயல் தான் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த நீதிபதி, கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை பதவி வகித்த  தலைமைச் செயலாளர்கள் ஜூலை 21ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Tags: தமிழக அரசுஉயர்நீதிமன்றம் கண்டனம்High Court condemns Tamil Nadu governmenநீதிமன்ற அவமதிப்பு வழக்கு
ShareTweetSendShare
Previous Post

பாரிஸ் டைமண்ட் லீக் : ஈட்டி எறிதலில் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா!

Next Post

ஈரான் மீதான போர் : ஒரு நாளுக்கு ஒரு பில்லியன் டாலர் செலவு – இஸ்ரேல்!

Related News

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies