டான் ரிவேரா மரணத்தில் மர்மம்? : அனபெல் பொம்மையை சுற்றி சுழலும் கேள்விகள்!
Jul 18, 2025, 07:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

டான் ரிவேரா மரணத்தில் மர்மம்? : அனபெல் பொம்மையை சுற்றி சுழலும் கேள்விகள்!

Web Desk by Web Desk
Jul 18, 2025, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அனபெல் திரைப்படத்தில் வரும் பேய் பொம்மை பற்றி வதந்திகளும் கட்டுக்கதைகளும் தற்போதும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்த சூழலில் அனபெல் பொம்மையுடன் சுற்றிய நியூ இங்கிலாந்து மனநல ஆராய்ச்சி சமூகத்தின் தலைமை விசாரணை அதிகாரி டான் ரிவேராவின் திடீர் மரணம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.

ஹாலிவுட்டில் CONJURING, THE NUNE, ANNEBELLE போன்ற திகிலூட்டும் திரைப்படங்களைத் தனியாக அமர்ந்து பார்த்தால் அவ்வளவுதான். நெஞ்சுவலியே வந்துவிடும்.. இதில் அனபெல் திகில் படம் உலகம் முழுவதும் பிரபலமானது. அமானுஷ்ய சக்திகள் நிறைந்த Annabelle பொம்மை சுற்றி நடக்கும் திகிலூட்டும் சம்பவங்களின் கலவையே இப்படத்தின் கதை.

சர்வதேச அளவில் குக்கிராமங்கள் வரையிலும் பிரபலமான இந்த பொம்மை, அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள ஓர் அருங்காட்சியகத்தில் கண்ணாடி பெட்டிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பொம்மை திடீரென மாயமாகிவிட்டதாக   இணையதளத்தில் வெளியான தகவலும், கட்டுக்கதைகளும் காட்டுத்தீ போல் பரவியது.

வழக்கமாக வாரன்ஸ் அக்கல்ட் அருங்காட்சியகத்தில்  வைக்கப்பட்டிருக்கும் அனபெல் பொம்மை, கடந்த மே மாதம் ஒரு நிகழ்ச்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. அப்போது லூசியானாவில் அனபெல் பொம்மை காணாமல் போனதாக வதந்தி பரவியது.

இதை மறுத்த நியூ இங்கிலாந்து மனநல ஆராய்ச்சி சமூகத்தின் தலைமை விசாரணை அதிகாரி டான் ரிவேரா, இணையத்தில் வெளியான தகவல் அனைத்துமே வதந்தி என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார். அத்துடன் மரப்பெட்டிக்குள் அனபெல் பொம்மை பத்திரமாக இருப்பதாக டிக்-டாக் வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

2025 அக்டோபரில் இல்லினாயில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் அனபெல் பொம்மை பங்கேற்கும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக அனபெல் பொம்மையுடன் சுற்றித்திரிந்த டான் ரிவேரா, கடந்த ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியாவின் கெட்டிஸ்பர்க்கில் உள்ள அவரது ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மரணத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை. பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அது உறுதி செய்யப்படும் என்றும், அவர் இறந்த இடத்தில் சந்தேகத்திற்குரிய எதுவும் இல்லை என்றும் விசாரணை அறிக்கை கூறுகிறது.

இந்த நிலையில் டான் ரிவேரா மரணத்திற்கு அனபெல் பொம்மைதான் காரணமா என்ற சந்தேகத்தை இணையவாசிகள் எழுப்பி வருகின்றனர்.

Tags: Annabelle dollடான் ரிவேரா மரணத்தில் மர்மம்?அனபெல் பொம்மைMystery in Dan Rivera's death?: Questions revolving around the Annabelle doll!
ShareTweetSendShare
Previous Post

மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடித்திருவிழா – ஆகஸ்ட் 1-ம் தேதி தொடக்கம்!

Next Post

எச்சரிக்கும் மருத்துவர்கள் : சதை உண்ணும் பாக்டீரியா!

Related News

‘கிஸ் கேம்’ சர்ச்சையில் ஆஸ்ட்ரோனமர் CEO : வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் – கலாய்த்த எலான் மஸ்க்!

இந்தியாவை முஸ்லீம் நாடாக்க முயற்சி : சிக்கிய மத மாற்ற கும்பல் – குவிந்த பல நுாறு கோடி!

“Spam content” சர்ச்சையால் அதிரடி : 1 கோடி கணக்குகளுக்கு பூட்டுப்போட்ட மெட்டா!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ரூ.180 கோடி முறைகேடு!

ஈராக் : வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 69 பேர் உயிரிழப்பு!

சூடான் ராணுவம் – துணை ராணுவம் இடையே நீடிக்கும் மோதல்!

Load More

அண்மைச் செய்திகள்

அண்ணாமலையார் திருக்கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம்!

ஜம்மு-காஷ்மீர் : சாலை விபத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் 5 பேர் காயம்!

2023-24 இல் பிசிசிஐ-இன் வருவாய் ரூ.9,741 கோடி!

மாற்றத்தையும், வளர்ச்சியையும் வங்காளம் விரும்புகிறது : பிரதமர் மோடி

மதுரை : வரதட்சணை கேட்டு மனைவியை சரமாரியாக தாக்கிய காவலர்!

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன் : வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 

டிஎஸ்பி சுந்தரேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது : நயினார் நாகேந்திரன்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான் இந்தியப் பொருளாதாரத்தின் தூண்கள் : தர்மேந்திர பிரதான்

திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம் தொடர்கிறது : காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies