ஆர்.ஆர்.எஸ்., முதல் ஆளுநர் வரை - இல.கணேசன் கடந்து வந்த பாதை!
May 6, 2026, 05:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆர்.ஆர்.எஸ்., முதல் ஆளுநர் வரை – இல.கணேசன் கடந்து வந்த பாதை!

Murugesan M by Murugesan M
Aug 16, 2025, 11:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகாலாந்து மாநில ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் உடல்நலக்குறைவு காரணமாகத் தனது 80-வது வயதில் காலமானார். அவரது வாழ்க்கை பயணம் குறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 1945-ம் ஆண்டு இலக்குமிராகவன்  அலமேலு தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் இல.கணேசன். சிறு வயது முதலே ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இல.கணேசன் அந்த அமைப்பின் ஒரு அங்கமாகச் செயல்பட்டு வந்தார்.

நாட்டிற்குச் சேவை செய்யும் மனப்பான்மையுடன் இருந்த இல.கணேசன் திருமணம் செய்து கொள்ளாமல் தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்தார். தொடர்ந்து அரசியல் ஈடுபாடு காரணமாகத் தன்னை பாஜக-வில் இணைத்துக்கொண்டார் இல.கணேசன்.

கட்சிப் பணிகளில் இல.கணேசனின் ஈடுபாட்டைக் கௌரவிக்கும் வகையில், அவருக்கு பாஜக மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து பாஜக-வின் தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்தார் இல.கணேசன்.

தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியங்கள் மீதான பற்றால் பொற்றாமரை என்ற தமிழ் மொழி சார்ந்த அமைப்பை இல.கணேசன் நடத்தி வந்தார். மக்கள் பணியில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த இல.கணேசன், கடந்த 2016-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2 ஆண்டுகள் வரை அந்த பதவியில் நீடித்தார்.

பாஜக-வின் நீண்டகால உறுப்பினராக இருந்து வந்த இல.கணேசனை, கடந்த 2021-ம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமித்து அழகு பார்த்தது கட்சியின் தலைமை. அதே காலகட்டத்தில் மேற்கு வங்க ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்த இல.கணேசன், 2023-ம் ஆண்டு நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

அண்மையில் சென்னை வந்திருந்த இல.கணேசன் தவறி கீழே விழுந்து காயமடைந்ததால், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இல.கணேசனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இயற்கை எய்தினார்.

நாட்டின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல.கணேசன் மறைவுக்குப் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags: இல.கணேசன் காலமானார்RSStnbjpFrom RRS to GovernorI. Ganesan
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய அதிபர் புதின் தன்னை சந்திக்க சம்மதம் தெரிவித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

Next Post

கிருஷ்ண ஜெயந்தி – கிருஷ்ணர் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies