15 மனைவிகள் 35 குழந்தைகளுடன் வலம் வரும் நவீன ராஜாவின் கதை!
Aug 6, 2026, 02:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

15 மனைவிகள் 35 குழந்தைகளுடன் வலம் வரும் நவீன ராஜாவின் கதை!

Murugesan M by Murugesan M
Oct 7, 2025, 08:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சில மாதங்களுக்கு முன் அபுதாபி விமான நிலையத்தில் வந்திறங்கிய ஒரு நபரின் வீடியோ சமூக வலைத் தளங்களில் தற்போது வைரலாகி சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. யார் அந்த நபர்? அவரின் பின்னணி என்ன? ஏன் அவரின் வருகை உலகையே வியக்க வைத்தது? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலகமெங்கும் ஜனநாயகம் ஆட்சி செய்கிறது என்றாலும், எல்லா மன்னர்களும் தங்கள் அதிகாரத்தை இழந்ததில்லை. தாய்லாந்து,சவுதி அரேபியா, புரூனே என இன்னமும் அரச குடும்பத்தினர் ஆட்சி செய்யும் நாடுகள் உலகில் உள்ளன. அப்படியான ஒரு தேசம் தான் சுவாசிலாந்து. ஆப்பிரிக்காவின் கடைசி முழுமையான முடியாட்சி தேசமாகும்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தச் சிறிய நாட்டை 1986ம் ஆண்டு முதல் மூன்றாம் மன்னர் எம்ஸ்வதி ஆட்சி செய்து வருகிறார். 18 வயதில் மன்னரான எம்ஸ்வதியின் இயற்பெயர் மகோசெடிவ் டிலாமினி என்பதாகும். ஆப்பிரிக்க மொழியில் அதற்கு “நாடுகளின் ராஜா” என்று பொருளாகும்.

இவரின் தந்தை சோபுசா தான் 82 ஆண்டுகள் இந்நாட்டை ஆட்சி புரிந்தார். 82 வயதில் 125க்கும் மேற்பட்ட மனைவிகளுடனும், 210க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் கிட்டத்தட்ட 1,000-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளும் சோபுசா தானுக்கு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை வழியில் நடக்கும் மகன் என்பது போல் மன்னர் எம்ஸ்வதிக்கு சட்டப்பூர்வமாக 15 மனைவிகள் உள்ளனர்.

2006ம் ஆண்டு, ஒரு பெண்ணைக் கடத்தி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார் என்று சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்ததை அடுத்துஅந்தப் பெண்ணுக்கு நாட்டின் ராணி என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளார். ஒரு மனைவிக்கு மட்டும் ராணியின் அங்கீகாரத்தை வழங்கியுள்ள மன்னர், தான் திருமணம் செய்து கொண்ட மற்ற பெண்களை எல்லாம் அந்தப்புரநாயகிகளாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் தன்னை விட 35 வயது வித்தியாசம் உடைய ஒரு பெண்ணை 16வது மனைவியாக ஆக்கிக் கொண்டார். ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இவரின் 16வது மனைவி இவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. இதுவரை மன்னருக்கு 35 குழந்தைகள் உள்ளனர். இவர் மனைவியைத் தேர்ந்தெடுக்கும் விதமே புதுமையானது.

முதல் இரண்டு மனைவியர்களும் ஒரு சிறப்பு சபையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பாரம்பரியத்தின் படி, மன்னரின் முதல் மனைவி மட்செபுலா குலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், இரண்டாவது மனைவி மோட்சா குலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

அதன்பிறகு, மன்னருக்கு மற்ற குலங்களிலிருந்து மனைவிகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உள்ளது. இந்நாட்டில் குறைந்தது 17 குலங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பாரம்பரிய கற்பு அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

மன்னரின் அரண்மனையில் நடைபெறும் திருமணமாகாத பெண்களின் அணிவகுப்பிலிருந்து புதிய மணப்பெண்களை மன்னர் தேர்ந்தெடுக்கிறார். ஆயிரக்கணக்கான திருமணமாகாத பெண்கள் பங்கேற்கும் கற்பு அணிவகுப்பில் இளம் பெண்கள் பங்கேற்பது கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது. 1.3 மில்லியன் மக்கள் வசிக்கும் சுவாசிலாந்தின் பெயரை 2018 ஆம் ஆண்டில், “சுவாசிகளின் நிலம்” என்று பொருள்படும் வகையில் “எஸ்வதினி இராஜ்ஜியம்” என்று அறிவித்தார். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து நாடு சுதந்திரம் அடைந்த 50வது ஆண்டு விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

என்றாலும், உலகின் பிற நாடுகளால் இந்தப் பெயர் மாற்றம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உலகில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருக்கும் இந்நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வறுமையில் உள்ளனர்.

நாட்டின் பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு ஒரு டாலர் கூடக் கிடைக்காமல் வறுமையில் வாடும் நிலையில் மன்னரின் ஓராண்டு வீட்டு பட்ஜெட்டுக்காக 61 மில்லியன் அமெரிக்க டாலரை அந்நாட்டு நாடாளுமன்றம் ஒதுக்கியது. 500,000 அமெரிக்க டாலர் மதிப்புடைய மேபேக் உட்பட ஆடம்பர கார்களை மன்னர் பயன்படுத்துவது குறித்த கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, தனது கார்களின் புகைப்படங்களை வெளியிடுவதற்குத் தடை செய்தார். அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்களுக்கும் தடை விதித்தார்.

அடிப்படைப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், 2021 ஆம் ஆண்டில் வேலையின்மை 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், நாட்டில் ரியல் எஸ்டேட், சுற்றுலா, விவசாயம், தொலைத்தொடர்பு மற்றும் வனவியல் உள்ளிட்ட துறைகளில் ஈடுபடும் பெரும் நிறுவனங்களில் அதிகமான பங்குகள் மன்னரிடம் உள்ளது.

உலகின் 15 பணக்கார மன்னர்களின் பட்டியலில், இடம்பெற்ற மன்னர் எம்ஸ்வதியின் நிகர சொத்து மதிப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகும் என்று FORBES தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் மூன்றாம் எம்ஸ்வதி மன்னர் அபுதாபிக்கு வரும் பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

சுவாசிலாந்து மன்னர் 15 மனைவிகள்,35 குழந்தைகள் மற்றும் 100 பணியாளர்களுடன் அபுதாபிக்கு வந்தார் என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோ ஆப்பிரிக்க மன்னரின் ஆடம்பரமான வாழ்க்கை முறையைப் பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டியது. புலி அச்சு பொறித்த பழங்குடியின பாரம்பரிய உடையை மன்னர் அணிந்திருந்தாலும் அவரின் மனைவிகள் அனைவரும் ஆடம்பரமான நவ நாகரீக உடைகளை அணிந்திருந்தனர்.

அதிக எண்ணிக்கையில் வந்த மன்னரின் பரிவாரங்கள் இடையூறுகளை ஏற்படுத்தியதாகவும். நிலைமையைச் சமாளிக்க, அபுதாபி விமான நிலையத்தின் மூன்று முனையங்களையும் தற்காலிகமாக அபுதாபி அரசு மூடியதாகச் சொல்லப்படுகிறது. இந்த வீடியோ வைரலானதும், நெட்டிசன்கள் மன்னரின் ஆடம்பரத்தைப் பார்த்துக் கடும் விமர்சனங்களை மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர்.

Tags: The story of a modern king with 15 wives and 35 children18 வயதில் மன்னரான எம்ஸ்வதியின் இயற்பெயர் மகோசெடிவ் டிலாமினி
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவில் மோட்டல் தொழிலில் ஆதிக்கம் : கொலையாகும் குஜராத்திகள் பின்னணி என்ன?

Next Post

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

Related News

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies