என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!
Sep 12, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

என்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு : டாடா குழுமத்தில் இப்படி நடந்ததே இல்லை!

Murugesan M by Murugesan M
Oct 14, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் பதவிக்காலத்தை 2032ம் ஆண்டுவரை நீட்டிக்க டாடா அறக்கட்டளை ஒப்புதல் அளித்துள்ளது. அவரது தலைமைக்காக முதல்முறையாக விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தமிழரான என்.சந்திரசேகரனின் அனுபவம் டாடா குழுமத்தை மேலும் வளர்ச்சியை நோக்கி தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை கொண்டிருக்கிறது டாடா குழுமம். ரத்தன் டாடா மறைவுக்குப் பின் டாடா குழுமத்தை வளர்ச்சி பாதைக்குத் திரும்பியவர் யாரென்றால் டாடா சன்ஸின் தலைவரும், தமிழருமான என்.சந்திரசேகரன் தான்… அவரது பதவிக்காலத்தில் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் தடைகளைத் தாண்டிய வளர்ச்சியைப் பெற்றது.

ஒரு பக்கம் அதிகார மோதல் தலையெடுத்துள்ள நிலையில், நம்பிக்கை நட்சத்திரமான என்.சந்திரசேகரனின் பதவிக்காலத்தை 2032ம் ஆண்டு வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்துள்து டாடா அறக்கட்டளை…. நிர்வாகப் பதவிகளில் இருப்பவர்கள் 65 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பது டாடா குழுமத்தின் விதி.

அதே நேரத்தில் அப்பதவியில் இருக்கும் நபர் விருப்பப்பட்டால், 70 வயது வரை Non-executive பதவியில் தொடரலாம். இந்த முக்கியமான விதியைத் தளர்த்தி, என்.சந்திரசேகனுக்கு 3வது முறையாகப் பதவி நீட்டிப்பு வழங்கியிருக்கிறது டாடா அறக்கட்டளை.

டாடா குழுமத்தின் வரலாற்றிலேயே, செயலில் உள்ள தலைமைப் பதவிக்கு ஓய்வு விதியைத் தளர்த்துவது இதுவே முதல் முறை…. செப்டம்பர் மாதம் நடந்த டாடா அறக்கட்டளைக் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

என்.சந்திரசேகரனின் பதவி நீட்டிப்புக்குப் பல்வேறு முக்கியமான காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன… டாடா குழுமம் அடுத்த 30 ஆண்டுக்கான வளர்ச்சி பாதையைத் திட்டமிட்டுள்ள நிலையில், செமிகண்டக்டர், எலெக்ட்ரிக் வாகனப் பேட்டரிகள், ஏர் இந்தியா போன்ற முக்கிய திட்டங்களைக் கையாள தொடர்ச்சியான அனுபவம் மிக்கத் தலைவர் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்-இல் அனுபவமுள்ள என். சந்திரசேகரன், 2016-ஆம் ஆண்டு அக்டோபரில் டாடா சன்ஸ் குழுவில் சேர்ந்தார். 2017 ஜனவரியில் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட அவருக்கு, 2022 பிப்ரவரியில் இரண்டாவது முறையாக ஐந்தாண்டு பதவிக்காலம் வழங்கப்பட்டது.

என்.சந்திரசேகரன் தலைமையில், டாடா குழுமம் கடந்த 5 ஆண்டுகளில் வருவாயைக் கிட்டத்தட்ட இரட்டிப்பாக்கியது, நிகர லாபம், சந்தை மூலதனத்தை மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது.

செமிகண்டக்டர், மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் தயாரிப்பு மற்றும் ஏர் இந்தியா போன்ற முக்கியமான திட்டங்களை, நிர்வாகத் தலைமை நேரடியாகப் பார்ப்பது அவசியம் என்று கருதப்பட்டது.

டாடா குழுமத்தின் மிகப்பெரிய திட்டங்களில் ஏற்படும் தாமதங்கள், செலவு அதிகரிப்பு அல்லது தவறான நடவடிக்கைகள் குழுவின் நம்பகத்தன்மை அல்லது நிதி ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் . எனவேதான் என்.சந்திரசேகரனின் திறமை மற்றும் அனுபவத்தை இழக்க விரும்பாத டாடா குழுமம் அவரது பதவியை நீட்டித்துள்ளது.

Tags: tataN. Chandrasekaran's term extension: This has never happened in the Tata Groupடாடாஎன்.சந்திரசேகரன் பதவிக்காலம் நீட்டிப்பு
Share
Tweet
SendShare
Previous Post

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

Next Post

முடிவுக்கு வந்த காசா போர் : இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை விடுவித்த ஹமாஸ்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies