திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது, தமிழகத்தின் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கினார்,
வீரமும், நாட்டுப்பற்றும் தமிழக மக்களின் நாடி, நரம்புகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது எனதெரிவித்த பிரதமர், தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் சுபாஷ் சந்திர போஸ் உடன் இணைந்து தேசத்தின் விடுதலைக்காக போராடினர் என்றும் தெரிவித்தார்.
ஊழலில் திளைக்கும் திமுக ஆட்சிக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது என்றும்,
தமிழகத்தில் ஊழலற்ற அரசை NDA கூட்டணி அமைக்கும் என்றும் கூறினார்.
தமிழக மக்கள் பாஜக தலைமையிலான NDA கூட்டணி அரசை விரும்புகிறார்கள் என்றும பிரதமர் தெரிவிததார்.
திமுக அரசிடம் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் NDA கூட்டணி தலைவர்கள் இணைந்துள்ளோம் என்றும், திமுக என்றால் CMC…. அதாவது க்ரைம், மாஃபியா, கரப்ஷன் என பிரதமர் விமர்சித்தார்.
தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை… நம்பகத்தன்மையும் இல்லை…ஒரே ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்குகிறது திமுக அரசு என்றும் அவர் சாடினார்.
திமுக அரசில் எத்தனை லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது என்பது குழந்தைக்கு கூட தெரியும் என்றும், தமிழ்நாட்டின் கலாசாரம், ஆன்மிகம் உள்ளிட்டவை தேசத்தின் பெருமைகளாக திகழ்கின்றன என்றும் கூறினார்.
எந்த அளவுக்கு தமிழ்நாடு வேகமாக முன்னேறுகிறதோ…. தேசமும் அந்த அளவுக்கு வேகமாக வளரும் என்றும் அவர் தெரிவித்தார்.
திமுக தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு தேவையான அளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் பிரதமர் கூறினார்.
தமிழகத்தில் மீனவர்கள், விவசாயிகளுக்கு NDA கூட்டணி பலமான ஆதரவை வழங்கி வருகிறது என்றும், 11 ஆண்டுகளில் NDA அரசு தமிழகத்தின் வளர்ச்சிக்காக வரலாறு காணாத பணிகளை செயல்படுத்தி இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்
தமிழகத்தில் NDA கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், இரட்டை இன்ஜின் அரசு அமையும் எனறும், போதையில்லா தமிழகத்தை உருவாக்க NDA தலைமையிலான கூட்டணி அரசால் மட்டும்தான் முடியும் அவர் கூறினார்.
திமுகவினருக்கும், போதைப் பொருள் கும்பலுக்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் தமிழகத்தில் பெண்கள்
மட்டுமின்றி யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்றும் கூறினர்.
NDA அரசின் முத்ரா திட்டத்தால், தமிழக பெண்கள், இளைஞர்கள் பெரும் ஆதாயம் பெற்று வருகின்றனர் என்றும், உலகெங்கும் இருக்கும் முதலீட்டாளர்களின் முதன்மை விருப்பமாக இந்தியா திகழ்கிறது என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
உலகமே இந்தியாவை உற்றுநோக்கும் இந்த தருணத்தில் தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசாங்கம் அமைந்தால் தான் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் குற்றம், ரவுடிகள் அட்டகாசம் கட்டுக்குள் இருந்ததாகவும், தமிழ்நாட்டில் NDA கூட்டணி அரசு ஆட்சியமைத்தால் அனைத்து வீடுகளிலும் குழாய் வழியாக குடிநீர் பாயும் என்றும், . இது தனதுவாக்குறுதி என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் NDA கூட்டணி அரசு ஆட்சியமைத்தால் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.
பல மாநில முதலமைச்சர்கள், முக்கிய தலைவர்களுக்கு திருக்குறளை பரிசாக வழங்கி மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன் என்றும், தமிழ் கலாசாரத்தை பாராட்டுவது மட்டுமின்றி, அதனை பாதுகாக்க உறுதியாக பணியாற்றுவோம் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கடவுள் முருகனுக்காக மலை மீது தீபம் ஏற்றுவது பாதிக்கப்பட்ட போது குரல் கொடுத்த பாஜக தலைவர்களை பாராட்டுகிறேன் என்றும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாக்குவங்கி அரசியலுக்காக திமுக அரசு செயல்பட்டதாக பிரதமர் குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ், திமுக கூட்டணி அரசில் தான் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடைவிதிக்கப்பட்டதாகவும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை மீட்டுக் கொடுத்தது NDA அரசு என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
தமிழகத்தில் திறமைகளுக்கு குறைவே இல்லை என்றும், இளைஞர்கள் மீது நம்பிக்கை வைக்கும் அரசாங்கம் தான் தமிழ்நாட்டின் தற்போதைய தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக இளைஞர்களுடன் ஒன்றாக இணைந்து கைகோர்த்து,முன்னேற்றும் அரசாக NDA கூட்டணி அரசு திகழும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
















