பேராவூரணி அருகே உரிய முறையில் அடித்தளம் அமைக்காமல் கட்டப்படும் அரசு பள்ளி கட்டடத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட பொன்னிங்கண்ணிக்காடு கிராமத்தில் நடுநிலைப் பள்ளிக்கான புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டடத்தில் முறையாக அடித்தளம் அமைக்காமலும், ஜல்லி சிமெண்ட் கலவை போடாமல் மண்ணை மட்டும் கொட்டியும் அடித்தளம் அமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
உரிய முறையில் கான்கிரீட் அமைக்காமல் கட்டடம் கட்டப்படுவதால் விரைவில் இடிந்து விழும் அபாயம் உள்ளதாகவும், குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
தரமற்ற முறையில் பள்ளி கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
















