புதுச்சேரிக்கு வரும் 11ஆம் தேதி வருகை தரும் பிரதமர் மோடி, பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தேதி, இம்மாத இறுதியில் அறிவிக்கப்படவுள்ளது. வரும் தேர்தலிலும் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி வரும் 11 அல்லது 12ஆம் தேதி புதுச்சேரிக்கு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரிக்கு வருகை தரும் பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். மேலும், அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
















