மூடா வழக்கில் லோக் ஆயுக்தா போலீசாருக்கு 4 கோடியே 35 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மைசூர் நகரப்புற மேம்பாட்டு ஆணையத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 வீட்டுமனைகளை வாங்கியதாக புகார் எழுந்தது.
இந்த வழக்கை விசாரித்த மைசூர் லோக் ஆயுக்தா போலீசார், சித்தராமையா உட்பட 4 பேரும் குற்றமற்றவர்கள் என அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதனை பெங்களூர் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இதை எதிர்த்து சினேஹாமஹி கிருஷ்ணா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
லோக் ஆயுக்தா போலீசருக்கு 4 கோடியே 35 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து பொய்யான அறிக்கை தயார் செய்யப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
















