தமிழகம் காணாத மோசமான ஆட்சியை 5 ஆண்டு காலத்தில் திமுக காட்டியுள்ளது - அண்ணாமலை!
Jun 21, 2026, 02:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் காணாத மோசமான ஆட்சியை 5 ஆண்டு காலத்தில் திமுக காட்டியுள்ளது – அண்ணாமலை!

Manikandan by Manikandan
Feb 26, 2026, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மத்திய அரசு கோவையை வஞ்சித்துவிட்டது என வாய்கூசாமல் பொய் பேசுகிறார் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் தமிழகத்தைத் தலைகுனியச் செய்த கையாலாகாத திமுக அரசுக்கு முடிவு கட்டவும், மீண்டும் நமது தாய் மண்ணை தலைநிமிர செய்யவும் மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டங்களின் ஒரு பகுதியாக, இன்றைய தினம் மாலை, கோவை மாவட்டம் காளப்பட்டியில் உள்ள நேரு நகரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன் என கூறினார்

இன்னும் 50 நாட்களில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலை தமிழகம் சந்திக்க இருக்கிறது எனவும் இதுவரை தமிழகம் காணாத ஒரு மோசமான ஆட்சியை கடந்த 5 ஆண்டு காலத்தில் திமுக நமக்கு காட்டியிருக்கிறது அண்ணாமலை தெரிவித்துள்ளார்

மேலும் 2006-11 வரையிலான திமுக ஆட்சி இருண்ட ஆட்சியாக இருந்தது. 2021 முதல் தற்போது வரையிலான திமுக ஆட்சி கொடுங்கோலாட்சியாக இருக்கிறது எனவும் தேர்தல் எப்போது வரும் என மக்களே காத்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவை விரட்டியடிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள் என கூறினார்

சமீபத்தில், திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்கள், கோவை மக்களை இழிவுபடுத்திப் பேசினார். கொரோனா பெருந்தொற்றின் போது, திமுகவிற்கு வாக்களிக்காத கோவை மக்களுக்கு குறைந்தளவு தடுப்பூசி வழங்கி திமுக அரசு வஞ்சித்தது.

திமுகவிற்கு வாக்களிக்காத மக்களை, திமுக அரசு நடத்தும் விதம் இதுவே. கோவை பகுதியில் மட்டும், கடந்த 3 ஆண்டுகளில், 325 நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன. அதற்கு காரணம், நூற்பாலைகளுக்கான 1 யூனிட் மின்சாரத்தை திமுக அரசு ரூ.9.25-க்கு வழங்குவது தான். தொழில்வளம் நிறைந்துள்ள கோவையில் தொழிற்சாலைகளை வளர்க்க திமுக அரசு எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்

2011 கோவை மக்கள் தொகையை கணக்கிட்டு கோவை மெட்ரோ திட்டத்திற்கு தவறான அறிக்கையைத் தயாரித்து கொடுத்தால் மத்திய அரசு எப்படி ஒப்புதல் வழங்கும்? மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை, மெட்ரோ இணைப்பிற்கான இடவசதிகள் உள்ளிட்ட தகவல்களை முறைப்படி வழங்காமல் அறிக்கை கொடுத்தால் ஒப்புதல் எப்படி கிடைக்கும்? ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மத்திய அரசு கோவையை வஞ்சித்துவிட்டது என வாய்கூசாமல் பொய் பேசுகிறார்.

திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவுகட்டும் தேர்தலாக வரும் சட்டமன்ற தேர்தல் அமையப்போவது உறுதி என அண்ணாமலை கூறியுள்ளார்

Tags: Electiontn bjpmkstalinCoimbatore metro railassemplycbe metrotamilnadubjpannamalaiDMK
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவில் அடுத்தாண்டு தொடங்கப்படும் முதல் புல்லட் ரயில் சேவை – ஜப்பானில் ரயில்வே அதிகாரிகள் பயிற்சி!

Next Post

திருமண நிகழ்வில் மணமகள் மீது துப்பாக்கிச் சூடு!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies