கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? - திமுகவை முந்துகிறதா அதிமுக - சிறப்பு தொகுப்பு!
Mar 17, 2026, 10:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 17, 2026, 08:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் திமுகவை பின்னுக்கு தள்ளி அதிமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. IANS-Matrize நடத்திய கருத்துக்கணிப்பு குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்…

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இதே போன்று கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் மாநிலங்களுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுதான் தாமதம், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் வெளிவரத் துவங்கவிட்டன.. அந்தவகையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியை வீழ்த்தும் என்பது IANS-Matrize நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணி 39-40 சதவிகித வாக்குகளைப் பெற்று, 114 முதல் 127 தொகுதிகளை கைப்பற்றும் என்றும்,  ஆளும் திமுக 37-38 சதவிகித வாக்குகளைப் பெற்று 104 முதல் 114 இடங்களைப் பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆளும் திமுக மற்றும் அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் என்பது தெரியவந்துள்ளது. (NEXT) மேற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களைத் தவிர மற்ற அனைத்து மண்டலங்களிலும் திமுகவை விட அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.

சென்னை மண்டலத்தில் திமுகவுக்கு கணிசமான வாக்குகள் உள்ளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தலைமையிலான தவெக முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், அக்கட்சி 14 முதல் 15 சதவிகித வாக்குகளை பெற்று, குறைந்தது 6 முதல் 12 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கேரளாவில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இரட்டை இலக்க வாக்கு சதவிகிதத்தைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. (NEXT) 140 தொகுதிகளைக் கொண்ட கேரளாவில் ஆட்சியைப் பிடிப்பதில் இழுபறி நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 61 முதல் 71 இடங்களையும், (NEXT) காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 58 முதல் 69 இடங்களையும் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

126 தொகுதிகளை கொண்ட அசாமில் பாஜக கூட்டணி 96 முதல் 98 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு 26 முதல் 28 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 294 இடங்களில் 155 முதல் 170 இடங்கள் வரை திரிணாமுல்காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என்றும்,  அதே நேரத்தில் பாஜக 100 முதல் 115 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்றும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் பாஜகவுக்கு அதீத வளர்ச்சியை தரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Tags: epswho will win in tn electionVijaydmdktvkNTKnainartamil nadu assembly elections 2026tamil nadu election 2026 india elections tamil nadu polls 2026bjptamil nadu election pulseDMKtamil nadu election liveADMKtamil nadu election news
ShareTweetSendShare
Previous Post

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றம் – சிஎஸ்கே வீரர் தோனி அறிவிப்பு!

Next Post

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

Related News

நாடு முழுவதும் பதுக்கி வைத்திருந்த 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு தகவல்!

ஜெர்ஸி எண் 7-லிருந்து 8-ஆக மாற்றம் – சிஎஸ்கே வீரர் தோனி அறிவிப்பு!

ஈரானின் பதில் தாக்குதல் ஆச்சரியம் அளிக்கிறது – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்பு!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

குழந்தைகளின் வயதை பாராமல் தாய்மார்களுக்கு அரசு விடுப்பு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

ஈரானை தாக்குமா பாகிஸ்தான் ? – சவுதியுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சிக்கல் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

கருத்துக்கணிப்பு சொல்வது என்ன? : தமிழக தேர்தல் களம் எப்படி? – திமுகவை முந்துகிறதா அதிமுக – சிறப்பு தொகுப்பு!

8 எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் – மக்களவையில் நிறைவேற்றம்!

மகாராஷ்டிராவில் பதுக்கி வைக்கப்பட்ட 330 எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடர்கிறது – இந்தியன் ஆயில் நிறுவனம்

ஹோர்மூஸ் நீரிணை வழியில் திக் திக் பயணம் – குஜராத் வந்தடைந்தது நந்தா தேவி கப்பல்!

அடுத்த 3 நாட்களில் தேர்தல் அறிக்கை தயாராகி விடும் – புதுச்சேரி பாஜக தலைவர் ராமலிங்கம் உறுதி!

துறையூர் அருகே மருத்துவ வசதி கிடைக்காமல் சிறுவன் உயிரிழப்பு – அண்ணாமலை கண்டனம்!

வீட்டு உபயோக சிலிண்டர் பெறும் நுகர்வோருக்கான பயோமெட்ரிக் அங்கீகாரம் – மத்திய அரசு விளக்கம்!

சிங்கம்புணரி அருகே இறந்த தந்தைக்கு இறுதி காரியம் செய்துவிட்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்!

விளாத்திகுளம் அருகே கொலை செய்யப்பட்ட மாணவி – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆறுதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies