தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்தவர் கவிஞர் கண்ணதாசன் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் புகழாரம் சூட்டியுள்ளார்.
கவியரசு கண்ணதாசனின் 100-வது பிறந்த நாளையொட்டி, சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
கண்ணதாசன் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் என். ஆனந்த், மரிய வில்சன், குமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்,
20-ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற கவிஞர் கண்ணதாசன் என புகழாரம் சூட்டினார்.
இந்து தர்மத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் நூல்களை எழுதி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றார் எனவும் குறிப்பிட்டார். மேலும், தமிழின் மீது அவர் வைத்திருந்த மாறாத பற்றும், தமிழர்கள் மீது கொண்டிருந்த அன்பும் என்றும் நினைவுகூரத்தக்கவை என ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்,
















