தவெக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார் என்பது குறித்து கூட்டணிக் கட்சிகளிடையே இன்னும் ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 1-ம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தவெக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், தவெக கூட்டணியின் தலைவராக முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஒருவரை தேர்வு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.
எனினும், ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பாக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதையடுத்து, அந்தப் பொறுப்புக்கு ப.சிதம்பரம், வைகோ, திருமாவளவன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
















