அண்டை மாநிலங்களின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய, உயர்மட்டக் குழு அமைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கான 25 சதவீத ஊதிய உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, வாடகைக் கட்டடங்களில் இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கான வாடகையை அரசே ஏற்கும் என்றும், கடைகள் மற்றும் கிடங்குகளுக்கான மின்சாரக் கட்டணத்தை டாஸ்மாக் நிர்வாகமே செலுத்தும் வகையில் மின்சாரத்துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அண்டை மாநிலங்களின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய விரைவில் உயர்மட்டக் குழு அமைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
















