மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வளமான தமிழ் மண்ணை காக்கும் வகையில், 600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் வினோத், ரசாயன உரங்களை மட்டுமே தொடர்ந்து பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள உயிர்ம கரிம அளவு குறைந்து, வேளாண் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வளமான தமிழ் மண்ணை காக்கும் வகையில், 600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார்.
ஒரு லட்சம் விவசாயிகளுக்கு 4 கோடி ரூபாய் மதிப்பில் மண் நல அட்டைகள் வழங்கப்படும் என்றும்,
மண் வளத்தை மீட்டெடுக்கும் வகையில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு தேவையான பசுந்தாள் உரம் விதைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மண் வளத்தை பாதுகாக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திரவ உயிரி உரங்கள் வழங்கப்படும் என்றும்,
புதிய இயற்கை வேளாண்மை தொகுப்பை உருவாக்க 9 கோடி ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் கூறினார்.
வளம் குறைந்த நிலங்களை மீட்டெடுக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
விழிப்புணர்வு மற்றும் விளம்பர பணிகளுக்கு 2 கோடி ரூபாய் மதிப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
மேலும், 122 கோடி ரூபாய் மதிப்பில் மண்வள பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும் என்றும்,
நெல் விதை மற்றும் விநியோக மானியத்திற்கான மாநில அரசின் சிறப்புத் திட்டத்துக்கு 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
















