தனக்கும் சபரீசனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜி ஸ்கொயர் நிறுவனர் பாலா ராமாஜெயம் தெரிவித்துள்ளார். தங்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக நிரூபித்துவிட்டால் 50 சதவீத பங்குகளை தந்துவிடுகிறேன் எனவும் சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், G Squareநிறுவனத்திற்கு பரந்தூர் அருகே 900 ஏக்கர் இருப்பதாக வதந்தி பரப்புவதாக தெரிவித்தார்.
எனக்கோ எனது பிள்ளைக்கோ எனது உறவினருக்கோ அந்த பகுதியில் ஒரு சென்ட் நிலம்கூட கிடையாது என்றும், “ஆதாரம் இல்லாமல் சட்டமன்றத்தில் பேசப்பட்டது குறித்து சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இதுவரை எங்கள் நிறுவனத்தின் மீது ஒரு புகாரும் வந்தது கிடையாது எனறும் எங்கள் நிறுவனத்தின் மீது ஒரு வழக்கு கூட கிடையாது என்றும் அவர் கூறினார்.
















