வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் - அரசிடம் செலுத்தாத போக்குவரத்து காவல் நிலையங்கள்!
Aug 28, 2026, 05:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் – அரசிடம் செலுத்தாத போக்குவரத்து காவல் நிலையங்கள்!

Manikandan by Manikandan
Aug 28, 2026, 04:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையை அரசு கருவூலத்தில் செலுத்தாமல் உள்ள போக்குவரத்து காவல் நிலையங்கள் அபராதம் வசூலிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை பரங்கிமலை, மீனம்பாக்கம் விமான நிலையம் உள்ளிட்ட 10 போக்குவரத்து காவல் நிலையங்களில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் இதுவரை அரசு கருவூலத்தில் செலுத்தப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதை அடுத்து, நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்படும் வரை புதிதாக அபராதம் வசூலிக்க காவல் ஆணையர் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அபராதத் தொகை கையாடல் செய்யப்படவில்லை என போக்குவரத்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

வசூலிக்கப்பட்ட அபராதங்களுக்கான ஆவணங்கள் ஆன்லைன் மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், நீதிமன்ற போர்ட்டலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக முறையாக பதிவாகாமல் நிலுவையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், வேறு ஏதேனும் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags: Chennaichennai traffic policetraffic finetraffic police fine
Share
Tweet
SendShare
Previous Post

மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல – சென்னை உயர் நீதிமன்றம்

Related News

மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல – சென்னை உயர் நீதிமன்றம்

இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!

நேபாள வெள்ள பாதிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு!

ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தல் -கூடலூரில் 2-வது நாளாக வேலை நிறுத்தம்!

இன்றைய தங்கம் விலை!

பரந்தூர் அருகே 900 ஏக்கர் நிலமா? – ஜி ஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயம் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் – அரசிடம் செலுத்தாத போக்குவரத்து காவல் நிலையங்கள்!

அடுத்த பிரதமர் யார்?- கருத்து கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம்!

சார்பதிவாளர், வட்டாட்சியர், உள்ளிட்ட அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ஒரு கோடி பறிமுதல்!

நேபாள நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க தயார் – ட்ரம்ப் அறிவிப்பு!

நெல்லை அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து!

திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

திபெத் – நேபாள எல்லையில் மற்றொரு ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

நேபாள வெள்ள மீட்பு பணியில் 13,000 பேர் – பிரதமர் பாலேந்திர ஷா தகவல்!

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 389 ஆக உயர்வு!

நேபாளத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு; சீனா எச்சரிக்கை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies