ஆசிய விளையாட்டு போட்டியில் தனிநபர் மற்றும் அணிகளுக்கான போட்டி என இரண்டு பிரிவிலும் பங்கேற்க உள்ளதாக பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்தார்.
தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாட்டில் முதன் முறையாக ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகள் சென்னை காரப்பாக்கத்தில் உள்ள கேசிஜி கல்லூரியில் வருகிற அக்டோபர் 26 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளன.
இதுதொடர்பான நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கலந்துகொண்டு, இந்திய அணியின் லோகோ மற்றும் ஜெர்சியை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பி.வி.சிந்து, ஆசிய விளையாட்டு போட்டிக்கு தீவிரமாக தன்னை தயார்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
















