பிரிட்டனில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், நாடு முழுவதும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
லண்டன் ஹித்ரோ, காட்விக், ஸ்டான்ஸ்டெட், மான்செஸ்டர் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் இதுவரை 625 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புறப்பட வேண்டிய விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், பயணிகள் பல மணி நேரம் விமான நிலையங்களில் காத்திருந்து அவதியடைந்தனர்.
இதற்கிடையே, மும்பையிலிருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரிட்டன் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு, இயல்பு நிலையை மீட்டெடுக்க அவசரமாகப் பணியாற்றி வருவதாகவும், பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளது.
















