ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா 5 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என்று கூறிய அதிபர் டிரம்ப், திமுகவை காப்பி அடித்து இருப்பதாக ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றால், ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா 5 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை விமர்சிக்கும் வகையில் ஸோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது சமூக வலைதளப் பதிவில் நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்த திட்டம் தமிழகத்தில் உருவாக்கப்பட்டு இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரப்பப்பட்டதாகவும், தற்போது அதிபர் டிரம்ப் திமுகவை காப்பி அடித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவில் சுமார் 27 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாகவும், அனைவருக்கும் தலா 5 ஆயிரம் டாலர் வழங்கப்பட்டால், அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
















