முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் பதிவான வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, வழக்கில் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்குப் பணப்பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதன் பின்னணி குறித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அன்பில் மகேஷின் வங்கிக் கணக்குகளை முடக்கி, பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்களைச் சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் முத்துக்குமார் எங்கு உள்ளார் என்பது குறித்தும், அவருக்கும் பணப்பரிவர்த்தனைகளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் அன்பில் மகேஷிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக அவரை காவலில் எடுத்து விசாரிக்க ஓரிரு நாளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
















